search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக சட்டசபை தேர்தல்"

    • சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது.
    • காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தேர்தலுக்கு பின்பு வெளியான 11 கருத்து கணிப்புகளில் 9 கணிப்புகள் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது. ஆனால் அனைத்து கருத்து கணிப்புகளையும் மீறி 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூட 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அறிவித்திருந்தார்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் மட்டும் யார் என்ன சொன்னாலும், எந்த கருத்து கணிப்புகள் எப்படி கூறி இருந்தாலும், நாங்கள் 141 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தேர்தல் முடிந்த பின்பும், நேற்று முன்தினம் வரையும், அதையே கூறி வந்திருந்தார்.

    அவரது கருத்து கணிப்பே கடைசியில் இறுதியாகி உள்ளது. அவர் கூறியபடி 141 தொகுதிகளுக்கு பதில், 5 தொகுதிகள் மட்டும் குறைவாக 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தான் சொன்னபடி காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார்
    • 10,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

    பெங்களூரு

    ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமார சாமியின் மகன் நிகில் குமாரசாமி. இவர் கன்னட திரையுலகின் இளம் நடிகராக உள்ளார். இவர் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோட்டையான கருதப்படும் ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் ஹுசைனும், பா.ஜனதா சார்பில் கவுதம் மரிலிங்கே கவுடாவும் போட்டியிட்டனர்.

    இதில் தொடக்க முதலே நிகில் குமாரசாமிக்கும், இக்பால் ஹுசைனுக்கும் இடையே போட்டி நிலவியது. இருப்பினும் இக்பால் ஹுசைன் ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னிலை பெற்று வந்தார்.

    மொத்தம் 20 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், 12, 13, 14 சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளரை விட நிகில் கூடுதல் வாக்குகளை பெற்றார். இருப்பினும் முடிவில் 10 ஆயிரத்து 715 ஓட்டுகள் வித்தியாசத்தில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார்.

    ஏற்கனவே நிகில் குமாரசாமி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதாவிடம் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலிலும் நிகில் குமாரசாமி தோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சி தலைவர்களான தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராமநகர் மற்றும் சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

    தற்போது தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த தொகுதி 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஜனதாதளம் (எஸ்) கட்சி தொடர்ச்சியாக பெற்ற வெற்றிக்கு காங்கிரஸ் இந்த முறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    ராமநகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்:-

    இக்பால் ஹுசைன் (காங்.) - 87,690

    நிகில் குமாரசாமி (ஜனதாதளம்(எஸ்))-76,975

    கவுதம் மரிலிங்கேகவுடா (பா.ஜனதா)- 12,912

    நோட்டா- 880

    • பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
    • காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்திருந்தார்கள்.

    ஆனாலும் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஆட்சியில் இருக்கும் கட்சி, தொடர்ந்து வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்ததில்லை என்ற வரலாறு தொடருகிறது. அதாவது 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஒவ்வொரு கட்சியும் மாறி, மாறி வெற்றி பெற்று தான் ஆட்சியை பிடித்திருந்தது.

    அதன்படி, தற்போதும் ஆட்சியில் இருந்த பா.ஜனதாவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல், காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது. கர்நாடக அரசியலில் கடந்த 38 ஆண்டு வரலாற்றில் தொடர்ந்து இருமுறை எந்த கட்சியும் ஆட்சியை தக்க வைத்து கொண்டதில்லை என்பது நேற்று நடந்த தேர்தல் முடிவுகள் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

    • கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
    • அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

    கொல்கத்தா:

    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

    இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.

    இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தென்மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.

    • மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
    • ஜெயா நகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பா.ஜ.க. சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

    முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார்.

    இதற்கிடையே, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார்.

    தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஜெயா நகரில் பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    • கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
    • இதனால் ஆளுநரிடம் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ராஜினாமா கடிதம் வழங்கினார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, 137 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, ராஜ்பவனில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரிடம் எனது ராஜினாமா கடிதம் வழங்கினேன். அது ஏற்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    ஆளுநரை சந்திக்கும் முன் அவர் கூறுகையில், பா.ஜ.க.வின் இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு தேசிய கட்சியாக ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களுடைய அனைத்து தவறுகளையும் நாங்கள் ஆய்வுசெய்து பாராளுமன்ற தேர்தலில் மீண்டெழுந்து வருவோம் என கூறியுள்ளார். 

    • மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
    • தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

    பெங்களூருவின் ஜெயாநகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பாஜக சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து தான் தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார். தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 224 தொகுதிகள் அடங்கிய கர்நாடக சட்டமன்றத்தில் ஜெயாநகரில் மட்டும் இன்னும் முடிவு தெரியாமல் உள்ளது. 

    • காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
    • ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.

     

    மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் படி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

    இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் பெங்களூரு வருகின்றனர். முதல்வரை தேர்வு செய்த பின் அடுத்த வாரத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது, அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுக்க காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

    • பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது.
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

     

    பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது..,

    "வெறுப்புணர்வுகளை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறுப்பு உணர்வு இல்லாமல் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டோம். மக்களின் சக்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் தொடரும். காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    • தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்.
    • காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்பு வெளியான கருத்து கணிப்பு முடிவுகளுக்கும், அரசியல் சூழ்நிலைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் பா.ஜனதா ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள நிலை குறித்து, வாக்காளர்களின் மனநிலை பற்றியும் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளது. அதன்படி, இந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.

    எங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் சொந்த பலத்திலேயே ஆட்சி அமைப்போம். பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் நிலை வராது.

    தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க போவதில்லை. அதனால் தான் அந்த கட்சியின் தலைவர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகவே வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீதே, அந்த கட்சியின் தலைவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்துவதற்கு உரிமை உள்ளது. அதன்படி, தலைவர்கள் ஆலோசிக்கிறார்கள். இது வழக்கமானது தான். எல்லா கட்சிகளின் தலைவர்களும் கூடி ஆலோசனை நடத்துவது சகஜமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் பிரசாரத்தின் போது சித்தராமையா தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார்.
    • சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு போட்டா போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, தான் முதல்-மந்திரி ஆவேன் என கூறி வாக்கு சேகரித்தார். அதுபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமாரும், மண்டியா, மைசூரு மாவட்டங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், ஒக்கலிக சமுதாய மக்கள் தேவகவுடாவை முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் ஆக்கினீர்கள். அதுபோல் அவரது மகன் குமாரசாமியையும் முதல்-மந்திரி ஆக்கினீர்கள். எனவே இந்த முறை என்னை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று கூறி அனல் பறக்கவிட்டார். இவ்வாறு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நீடித்து வருகிறது.

    ஆனால் காங்கிரஸ் மேலிடம், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கும் நபரை முதல்-மந்திரி ஆக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோஷமும் எழுந்துள்ளது. அதாவது முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. மற்றொரு தலித் சமுதாய தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் வழங்கவும் அந்த சமுதாயத்தினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில், கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் நேற்று விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.

    அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் நேற்று முன்தினம் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் முடிவு இன்று வெளியாகும் நிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு தலைவர்கள் இடையே போட்டா போட்டி எழுந்துள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
    • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    ×